பொதுவாக ஒரு சூழலின்
அபத்தங்களை அச்சூழலிலிருந்து முற்றிலும் அந்நியமான ஒரு நபரே எளிதில் சுட்டிக்காட்ட
முடியும். நிகழ்கால வாழ்வின் அபத்தங்களை சுட்டிக்காட்டுவது என்பது இலக்கியம், நாடகம்
சினிமா என அனைத்து கலைவடிவங்களுக்கும் எப்போதும் விருப்பமான பேசுபொருள்.
அவ்வகையில் ஒரு
படைப்பை கட்டமைக்க படைப்பாளிகள் கையாளும் பிரபலமான யுக்திகள் இரண்டு: முதலாவது ஓர்
உலகத்துக்கு முற்றிலும் அந்நியமானவனை கதைச்சூழலில் உலவவிட்டு அவனது பார்வையில் கதையை
சொல்வது. எமதர்மன் பூமிக்கு வருவது அல்லது மனிதன் நரகத்துக்கு போவது என்பதுபோல. புதுமைபித்தனின்
கடவுளும் கந்தசாமிபிள்ளையும் கதை இவ்வகைமைக்குச் சிறந்த உதாரணம். இரண்டாவது யுக்தி
காலப்பயணம் மேற்கொள்வது. தூரத்து கடந்துகாலத்துக்கோ அல்லது எதிர்காலத்துக்கோ கதைநாயகனை
பயணிக்கவைத்து கதை சொல்வது. அஸ்பெஸ்பெஸ்டாஸ் மனிதன் இவ்வகைக் கதை.
இம்மொழியாக்கத் தொடரில் ஒரு இலகுவான கதையை தேர்வு செய்யலாம் என்று யோசித்தவுடன்
முதலாவதாக நினைவுக்கு வந்த பெயர் ஸ்டீபன் லீகாக். முன்பு தளத்தில் வந்திருந்த இப்பதிவின் மூலமே இவரை அறிந்தேன். அப்போது இக்கதை என்னுள் பெரும்சலனம் எதுவும்
ஏற்படுத்தாவிட்டாலும் பகடிக் கதை என்ற அளவில் நினைவில் நீடித்தது. இப்போது
மீண்டும் வாசிக்கையிலும் இக்கதைக்கான மனநிலையுடன் வாசித்தால் நல்ல கதையாகவே
பட்டது. மொழியாக்கத்தை பகிர்ந்த போது சில நண்பர்கள் இக்கதை சற்றே சுமாரானதாக
இருப்பதாய் சந்தேகித்தனர். தீவிரமாக எதையேனும் எதிர்பார்த்திருப்பார்கள் போலும்.
அல்லது வாசகர்கள் இக்கதையை நேரடி அர்த்தத்தில் வாசிப்பார்களோ என்ற ஐயமும்
எனக்குள்ளது.
மேலும் கதை எழுதப்பட்ட காலகட்டம் (1911). பகடிக்
கதை என்ற அளவிலேயேகூட இக்கதையில் இடம்பெறும் இயற்கையை கைப்பற்றுதல் மற்றும்
பெண்கள் குறித்தான சிந்தனைகள் இன்றைய நோக்கில் சற்றே ஒவ்வாதவை. இந்த பின்புல
அறிதலோடு வாசிப்பவர்களே இக்கதையை சரியான அணுகமுடியும் என நினைக்கிறேன்.
எவ்வாறிருப்பினும் அனைத்துவகை எழுத்துக்கும் இங்கு இடமிருக்கிறது இங்கு பதிகிறேன்.
மூலம்: Nonsense
novels தொகுப்பின் அனைத்து கதைகளும் இங்குள்ளது,
Comments
Post a Comment