அன்பின் ஜெ,
இம்முறை ஊட்டி முகாமில் எனக்கு முக்கிய அறிமுகமாக இருந்தது அறிவியல் புனைவுதான். அதன் வரலாறு, இலக்கணம், எல்லைகள், சாத்தியங்கள் என சுசித்ரா மற்றும் கமலக்கண்ணன் அரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
அறிவியல் கதைகள் ஆங்கிலத்தில் இருப்பதாலும் அதன் அறிவியல் தகவல்சார்ந்த பின்னணி காரணமாகவும் வாசிப்பு சவால் கொண்டதாக இருப்பதாக சிலர் குறிப்பிட்டனர். நான் சுசித்ரா பகிர்ந்திருந்த கதைகளில் டெட் சியாங்கின் மூன்று கதைகளை வாசித்திருந்தேன். எனக்கு மூன்றுமே ஆர்வமூட்டும் வாசிப்பாகவே இருந்தது. அவற்றுள் Great Silence கதை ஒப்புநோக்க சிறியது. எனவே வாசிக்கும்போதே அதை மொழிபெயர்க்க முயற்சித்தாலென்ன எனத் தோன்றியது. என்னளவில் Exhalation கதையே மூன்றில் முதன்மையானது.
இருப்பினும் முதல் மொழியாக்க முயற்சி காரணமாக Great Silence கதையை எடுத்துக் கொண்டேன்.
Great Silence கதை ஒரு தவிர்க்க முடியாத சூழியல் கேள்வியை கேட்பதாகத்தான் முதலில் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் அது வெறும் உயிரின அழிவைப் பற்றி மட்டும் பேசவில்லை. அனைத்து உயிர்களுக்கும் இருக்க சாத்தியமுள்ள மரபை பற்றி பேசுகிறது. மனிதன் தன்னை குறித்தும் உலகை குறித்தும் கொண்டுள்ள மாயைகளை பற்றி பேசுகிறது. இக்கதையின் முக்கிய விமர்சனமாக இதில் ‘கதைத்தன்மை’ இல்லாததை ஊட்டியில் பேசிக் கொண்டிருக்கும்போது சுசித்ரா குறிப்பிட்டார். ஓர் அழகியல் விமர்சகனாக அது நிச்சயம் ஏற்கதக்கது. இருப்பினும் இக்கதை எழுப்பும் ஆதார கேள்விகளும் அதற்கு எடுத்துக்கொண்ட தத்துவார்த்த அனுகுமுறையும் முக்கியமானதென நினைக்கிறேன்.
கதைகளை அறிமுகப்படுத்திய சுசித்ராவுக்கு நன்றி.
ஜெ தளத்தில்: https://www.jeyamohan.in/121561
மூலம்: The
great silence - Ted Chiang - https://electricliterature.com/the-great-silence-by-ted-chiang/
Comments
Post a Comment