Skip to main content

Posts

Showing posts from May, 2019

அஸ்பெஸ்டாஸ் மனிதன் - ஸ்டீபன் லீகாக்

அஸ்பெஸ்டாஸ் மனிதன் நான் அதை உள்நோக்கத்துடன்தான் செய்தேன் என்பதை துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறேன். ஒருவேளை கொஞ்சம் பொறாமையாலும் இருக்கலாம். பிற எழுத்தாளர்கள் மட்டும் நினைத்த மாத்திரத்தில் நானூறு அல்லது ஐநூறு ஆண்டுகள் உறக்கத்தில் ஆழ்ந்து, பின்னர் தூரத்து எதிர்காலத்தில் விழித்தெழுந்து அவ்வுலகின் அற்புதங்களுக்கு சாட்சிகூறுவது என்பது நியாயமற்றதாகப் பட்டது. நானும் அதை செய்ய விரும்பினேன். சமூக சிக்கல்கள் குறித்து ஆராய்வதில் ஆர்வமுள்ள மாணவனாக நான் எப்போதுமே இருந்து வந்திருக்கிறேன், இப்போதும் கூட. இன்றைய உலகின் உறுமும் இயந்திரங்கள், உழைக்கும் வர்க்கத்தின் முடிவில்லா துயரங்கள், பூசல்கள், வறுமை, போர்கள் மற்றும் அதன் கொடுமைகள் என இவையனைத்தும் என்னை மிரளச் செய்கின்றன. துன்பங்களால் ஆற்றல்வற்றிப்போன மனிதகுலம் இயற்கையை முழுமையாக கைப்பற்றி, அமைதியின் சகாப்தத்திற்குள் நுழையும் காலம் ஒருநாள் நிச்சயம் வரும் என்ற சிந்தனையை நான் விரும்புகிறேன். அந்நாளைக் காண ஏங்குகிறேன். எனவே அதை வேண்டுமென்றே ஒருங்கமைத்தேன். நான் விரும்பியதெல்லாம் வழக்கமான முறைய

அஸ்பெஸ்டாஸ் மனிதன் - பின்புலம்- குறிப்பு

பொதுவாக ஒரு சூழலின் அபத்தங்களை அச்சூழலிலிருந்து முற்றிலும் அந்நியமான ஒரு நபரே எளிதில் சுட்டிக்காட்ட முடியும். நிகழ்கால வாழ்வின் அபத்தங்களை சுட்டிக்காட்டுவது என்பது இலக்கியம், நாடகம் சினிமா என அனைத்து கலைவடிவங்களுக்கும் எப்போதும் விருப்பமான பேசுபொருள். அவ்வகையில் ஒரு படைப்பை கட்டமைக்க படைப்பாளிகள் கையாளும் பிரபலமான யுக்திகள் இரண்டு: முதலாவது ஓர் உலகத்துக்கு முற்றிலும் அந்நியமானவனை கதைச்சூழலில் உலவவிட்டு அவனது பார்வையில் கதையை சொல்வது. எமதர்மன் பூமிக்கு வருவது அல்லது மனிதன் நரகத்துக்கு போவது என்பதுபோல. புதுமைபித்தனின் கடவுளும் கந்தசாமிபிள்ளையும் கதை இவ்வகைமைக்குச் சிறந்த உதாரணம். இரண்டாவது யுக்தி காலப்பயணம் மேற்கொள்வது. தூரத்து கடந்துகாலத்துக்கோ அல்லது எதிர்காலத்துக்கோ கதைநாயகனை பயணிக்கவைத்து கதை சொல்வது. அஸ்பெஸ்பெஸ்டாஸ் மனிதன் இவ்வகைக் கதை. இம்மொழியாக்கத் தொடரில் ஒரு இலகுவான கதையை தேர்வு செய்யலாம் என்று யோசித்தவுடன் முதலாவதாக நினைவுக்கு வந்த பெயர் ஸ்டீபன் லீகாக். முன்பு தளத்தில் வந்திருந்த   இப்பதிவின்     மூலமே இவரை அறிந்தேன். அப்போது இக்கதை என்னுள் பெரும்சலனம் எதுவும் ஏற

தக்கவைக்கும் இயந்திரம் - பிலிப் கே டிக்

தக்கவைக்கும் இயந்திரம் டாக்டர் லேப்ரின் கண்களை மங்கலாக மூடியவாறே தனது புல்வெளி நாற்காலியில் சாய்ந்தார். போர்வையை முழங்காலுக்கு மேலே இழுத்துவிட்டுக்கொண்டார். ”அதாவது?” நான் பேச்சு கொடுத்தேன். இறைச்சி சுடும் கனலடுப்பின் அருகே நின்று என் கைகளை தேய்த்துக் கொண்டிருந்தேன். அதுவொரு தெளிவான குளிர்நாள். லாஸ் ஏஞ்சல்ஸின் பிரகாசமான வானத்தில் கிட்டத்தட்ட மேகங்களே இருக்கவில்லை. லேப்ரினுடைய அந்த நடுவாந்திரமான வீட்டுக்குப் பின்னால் மலையடிவாரத்தின் எல்லை வரை மரங்கள் அடர்ந்த பசுமையின் நீட்சி இருந்தது – அது நகரத்தின் எல்லைக்குள்ளேயே ஒரு சிறிய வனத்தில் வாழ்வதுபோன்ற உணர்வை தந்தது. “அதாவது?” நான் பேச முற்பட்டேன். “அவ்வாறெனில், இயந்திரம் நீங்கள் எதிர்பார்த்த மாதிரி வேலை செய்துவிட்டது அல்லவா?” லேப்ரின் பதிலளிக்கவில்லை. நான் சுற்றிலும் நோக்கினேன். முதியவர் மந்தமாக வெறித்தவாறே தனது போர்வையின் பக்கவாட்டில் பொறுமையாக ஏறிக் கொண்டிருக்கும் பெரிய பழுப்புநிற வண்டை கவனித்துக் கொண்டிருந்தார். சீராக மேலேறி வந்த அவ்வண்டின் முகம் கண்ணியத்துடன் இருந்தது. சட்டென மேலே பறந்து அகன்று பின்னர் கொஞ்ச தொலைவில் காணமா