Skip to main content

Posts

Showing posts from June, 2019

முட்டாள் கிம்பெல் - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

முட்டாள் கிம்பெல் [I] நான்தான் முட்டாள் கிம்பெல். நான் என்னை முட்டாளாக நினைக்கவில்லை. ஆனால் மக்கள் என்னை அழைப்பது அவ்வாறுதான். பள்ளியில் இருக்கும்போதே எனக்கு அப்பெயரை அளித்துவிட்டனர். மொத்தம் எனக்கு ஏழு பெயர்கள் இருந்தன: க்ராக்கு, கழுதை, சணல்மண்டையன், லாகிரி, சிடுமூஞ்சி, மடையன் மற்றும் முட்டாள். இறுதிப் பெயர் நிலைத்துவிட்டது. என் முட்டாள்தனம் என்னவாக இருந்தது? என்னை எவரும் எளிதில் நம்பவைத்து விடலாம். அவர்கள் சொன்னார்கள், ”கிம்பெல், ரப்பியின் 1 மனைவியை ஈற்றறைக்குக் கொண்டுவந்துள்ளனர், செய்தி தெரியுமா?” எனவே நான் பள்ளிக்குச் செல்லவில்லை. கடைசியில் அதுவொரு பொய் என்று ஆனது. நான் எப்படி அறிந்திருக்க முடியும்? அவள் வயிறு பெரிதாக இருக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவள் வயிற்றை ஒருபோதும் நான் நோக்கியதில்லையே. இதெல்லாம் பெரிய முட்டாள்தனமா என்ன? அந்த கும்பல் பலமாக என்னை கேலிசெய்து சிரித்து ஆடிப்பாடிவிட்டு ஓர் இரவு வணக்கப் பாடலை பாடியது. மேலும் வழக்கமாக ஒரு பெண் ஈற்றறைக்குச் செல்கையில் அவர்கள் அளிக்கும் உலர் திராட்சைகளுக்குப் பதிலாக என் கைநிறைய ஆட்டுப் புழுக்கைகளை திணித்தனர். நான

மறுசந்திப்பு - ஐசக் பாஷவிஸ் சிங்கர்

மறுசந்திப்பு தொலைபேசி அடித்ததில் டாக்டர். மேக்ஸ் க்ரீட்சர் விழித்தெழுந்தார். படுக்கையின் அருகே மேசையில் இருந்த கடிகாரம் எட்டு மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடம் காட்டியது. “இந்த காலை நேரத்தில் யாராக இருக்கும்?” என முனகியவாறே தொலைபேசியை கையில் எடுத்தார். ஒரு பெண்குரல் ஒலித்தது, “டாக்டர் க்ரீட்சர், இந்த நேரத்தில் அழைப்பதற்கு மன்னிக்கவும். ஒருகாலத்தில் உங்கள் அன்புக்குரியவராக இருந்த பெண்மணி இறந்துவிட்டாள். லிஸா நெஸ்ட்லிங்.” ”அடக் கடவுளே!” ”இன்று காலை பதினொரு மணிக்கு இறுதிச் சடங்கு. நீங்கள் அறிந்து கொள்ள விரும்புவீர்கள் என நினைத்தேன்.” ”நீ சொல்வது சரி. தகவலுக்கு மிக்க நன்றி. லிஸா நெஸ்ட்லிங் என் வாழ்வில் பெரும்பங்கு வகித்தவள். நான் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் எனத் தெரிந்து கொள்ளலாமா?” “அது முக்கியமானதல்ல. உங்கள் இருவரின் பிரிவுக்குப் பிறகு நானும் லிஸாவும் நண்பர்களானோம். வழிபாடு நடைபெறும் இடம் கட்கெஸ்டால்ட்டின் (Gutgestalt’s) இறுதிச்சடங்கு சிற்றாலயம். உங்களுக்கு முகவரி தெரியும்தானே?” “ஆம், நன்றி.” அந்த பெண் தொலைபேசியைத் துண்டித்தாள். டாக்டர் க்ரீட்சர் சற