அஸ்பெஸ்டாஸ் மனிதன் நான் அதை உள்நோக்கத்துடன்தான் செய்தேன் என்பதை துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறேன். ஒருவேளை கொஞ்சம் பொறாமையாலும் இருக்கலாம். பிற எழுத்தாளர்கள் மட்டும் நினைத்த மாத்திரத்தில் நானூறு அல்லது ஐநூறு ஆண்டுகள் உறக்கத்தில் ஆழ்ந்து, பின்னர் தூரத்து எதிர்காலத்தில் விழித்தெழுந்து அவ்வுலகின் அற்புதங்களுக்கு சாட்சிகூறுவது என்பது நியாயமற்றதாகப் பட்டது. நானும் அதை செய்ய விரும்பினேன். சமூக சிக்கல்கள் குறித்து ஆராய்வதில் ஆர்வமுள்ள மாணவனாக நான் எப்போதுமே இருந்து வந்திருக்கிறேன், இப்போதும் கூட. இன்றைய உலகின் உறுமும் இயந்திரங்கள், உழைக்கும் வர்க்கத்தின் முடிவில்லா துயரங்கள், பூசல்கள், வறுமை, போர்கள் மற்றும் அதன் கொடுமைகள் என இவையனைத்தும் என்னை மிரளச் செய்கின்றன. துன்பங்களால் ஆற்றல்வற்றிப்போன மனிதகுலம் இயற்கையை முழுமையாக கைப்பற்றி, அமைதியின் சகாப்தத்திற்குள் நுழையும் காலம் ஒருநாள் நிச்சயம் வரும் என்ற சிந்தனையை நான் விரும்புகிறேன். அந்நாளைக் காண ஏங்குகிறேன். எனவே அதை வேண்டுமென்றே ஒருங்கமைத்தேன். நான் விரும்பியதெல்லாம் வழக்கமான முறைய...
மொழியாக்கப் பக்கம்